ஸ்ரீ ரங்கபூபதி மருந்தியல் கல்லூரியில் மெட்பிளஸ் வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது
ஸ்ரீ ரங்கபூபதி மருந்தியல் கல்லூரியில் இன்று மெட்பிளஸ் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது. இதில் மெட்பிளஸ் நிறுவனத்தின் மருந்தியல் துணை மேலாளர் திரு. வெங்கடேஷ் அவர்கள் கலந்துகொண்டு நேர்முகத் தேர்வை நடத்தி, 90-க்கும் மேற்பட்ட மாணவர்களை பணிக்குத் தேர்வு செய்தார்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் திரு. ஸ்ரீபதி அவர்கள் கலந்து கொண்டு தேர்வான மாணவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கி வாழ்த்தினார்.
மேலும், கல்லூரியின் தலைமை செயல் அலுவலர் (CEO) டாக்டர் ஆர். மணிகண்டன் அவர்கள் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கி, அவர்களின் எதிர்கால பணிவாழ்க்கை சிறக்க வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் நிறைவில் கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி ஜெயந்தி அவர்கள் நன்றி உரையாற்றினார்.
இந்த வேலைவாய்ப்பு முகாம் மாணவர்களின் தொழில் முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. தேர்வான அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரி நிர்வாகம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்