வேலூர், ஜன 07 –
வேலூர் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில்,
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்ற திமுகவின் 311வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டத்தை இடை நிலை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் பானுரேகா, செயலாளர் விஜயன், பொருளாளர் ஏழுமலை ஆகியோர் தலைமையில், 100க்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.