வேலூர், ஜன 07 –
சதர்ன் ரயில்வே பென்சனர் சமாஜ் காட்பாடி கிளை சார்பில் ஆண்டு விழா மற்றும் ஓய்வூதியர் தின விழா காட்பாடியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு கிளை தலைவர் ஏ.திருவேங்கடம் தலைமை தாங்கினார். வி.கந்தசாமி கே.தண்டபாணி முன்னிலை வகித்தனர் கிளை செயலாளர் எம்.ராஜா அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை கிளை நிர்வாகிகள் தலைவர் பி.விஜயன், செயலாளர் எம்.பி.வெங்கடேசன், பொருளாளர் பி.ரவி கோட்ட நிர்வாகிகள் பிரான்சிஸ்ராஜ், உதயசங்கர், பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் பி.கண்ணன் நன்றி கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோட்ட செயலாளர் உதயசங்கர்
எடாடாவது ஊதியக்குழு அறிக்கையை செயல்படுத்த 18மாத கால அவகாசம் மத்திய அரசு கோரியுள்ளது. எனவே அதுவரை ஓய்வூதியர்கள், தற்போது பணியாற்றுபவர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில்
10% இடைக்கால நிவாரணமாக
வழங்க வேண்டும்.
தேசிய பென்சன் திட்டம், ஒருங்கிணைந்த பென்சன் திட்டம் என ஓய்வூதியர்களை குழப்பத்தை ஏற்படுத்தாமல் இரண்டையும் திரும்ப பெற்று அனைவருக்கும் பலனளிக்கும் பழைய பென்சன் திட்டத்தை எதிர்வரும் பட்ஜெட்டில் மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
ரயில்வே சுகாதார துறை சார்பில் சென்னையில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் அதனை சுற்றியுள்ளவர்கள் மட்டுமே பயன்பெற முடியும். மற்ற கிளைகளில் சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. எனவே காட்பாடி கிளையில் பணியாற்றியவர்களும் நல்ல தரமான மருத்துவ சிகிச்சை பெற காட்பாடியில் எம்பவர்டு மருத்துவமனை துவங்க வேண்டும். அதுவரை வேலூர் மாவட்டத்தில் சிஎம்சி போன்ற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற சதர்ன் ரயில்வே நிர்வாகம் மற்றும் பொதுமேலாளர் ஆவண செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்