June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விழுப்புரம் மாவட்ட காவல்துறை

காவல் சார்பு ஆய்வாளர் எழுத்து தேர்வு இன்று விழுப்புரம் மாவட்டத்தில் நான்கு மையங்களில் நடைபெறுகிறது.

தேர்வாளர்கள் சோதனைக்கு பின்பு தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.P.சரவணன்.IPS. தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் 𝗦.தினகரன் அவர்களும் போலீசார் தேர்வு மைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் இன்று நடைபெறும் காவல் சார்பு ஆய்வாளர் பணிகளுக்கான எழுத்து தேர்வு விழுப்புரம் மாவட்டத்தில் 4 மையங்களில் மொத்தம் 6,569 நபர்களுக்கு (ஆண்கள் 5,005 + பெண்கள் 1,564) நடைபெற்று வருகிறது.

இதில் தேர்விற்கு வருகை புரிந்த தேர்வாளர்களின் எண்ணிக்கை – 4,732 (3,631 ஆண்கள் மற்றும் 1101 பெண்கள் )