June 13, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை

நிறைவேற்றபடுமா ?? என தொகுதி மக்களின் ஏக்கம்

சங்கராபுரம் டிச 22

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை

1.கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை ரயில் பாதை சங்கராபுரம் வழி அமைக்க வேண்டும்.

2.கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையை உடனடியாக பணியை தொடங்க வேண்டும்.

3.சங்கராபுரத்தை தலைமையிடமாக கொண்டு பாண்டலம், வடசிறுவள்ளூர், பூட்டை , வடசெட்டியந்தல் ஆகிய ஊராட்சிகளை இணைத்து புதிய நகராட்சியாக அறிவிக்க வேண்டும்.

4.சங்கராபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் (DSP OFFICE ) அமைக்க வேண்டும்.

5.சங்கராபுரத்தில் மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும்.( கள்ளக்குறிச்சி 20 கிமீ , திருக்கோவிலூர் 38 கிமீ )

6.சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் (24X7) மருத்துவர்கள் இரவு நேர பணியில் அமர்த்தப்பட வேண்டும்.

8.சங்கராபுரம் சிப்காட் பணியை உடனடியாக துவங்க வேண்டும்.

9 .கல்வராயன்மலையை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும்.

10.சங்கராபுரம் நகரின் மையத்தில் இருக்கும் பேருந்து நிலையத்தை இடம் மாற்றம் செய்து வேறு ஒரு இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.

11.சங்கராபுரம் தொகுதியில் அரசு பெண்கள் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும்.

  1. சங்கராபுரம் மகளிர் மேல்நிலைப்பள்ளியை உடனடியாக நகரின் பழைய பகுதியிலேயே மீண்டும் அமைக்க வேண்டும்.

13.கல்வராயன்மலையை மேம்படுத்த கடுக்காய் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்றும்
சங்கராபுரம் தொகுதி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகின்றன.

இந்த கோரிக்கைகள் இம்மாதம் 27ஆம் தேதி கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறந்து வைக்க வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்களா என தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு.