கிருஷ்ணகிரி: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன் நேற்று, 6வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் பெருமாள், மாநில ஒருங்கிணைப்பாளர் பூபதி ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். மாநில துணைத்தலைவர் வெங்கடேசன் போராட்டத்தை துவக்கி வைத்தார். செயலாளர் ஜெய்சங்கர் நன்றி கூறினார். போராட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்க, சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனே இயற்ற வேண்டும். அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பணிப்பளுவை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் மற்றும் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் உடனே வழங்க வேண்டும். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும், 10 சதவீத பங்களிப்பை ரத்து செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட, 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
வருவாய்த்துறை சங்க கூட்டமைப்பு; 6வது நாளாக காத்திருப்பு போராட்டம்

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!