வந்தவாசி, மார்ச் 05:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் பயிற்சி பெற்று 10 ஆம் வகுப்பு நேரடி தனித்தேர்வு எழுதவுள்ள 72 மாணவர்களுக்கு தேர்வுக் கூட ஹால்டிக்கெட் வழங்கும் நிகழ்வு கல்வி மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் மஹாவீர் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.பி.வெங்கடேசன் பங்கேற்று, கல்வி தான் வாழ்க்கையின் திறவுகோல் என்றும், பல்வேறு சூழல்களால் பள்ளிக்கு செல்ல இயலாது நேரடி தனித் தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் அனைவருக்கும் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. சமூக ஆர்வலர் பூங்கோதை நன்றி கூறினார்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!