வந்தவாசி, மார்ச் 09:
வந்தவாசியில் பழமை வாய்ந்த கோட்டை ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருள்மிகு சீதா சமேத ஶ்ரீ கோதண்டராமர் மற்றும் கோட்டை ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஆலய மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த மூன்று கால பூஜைகளாக சங்கல்பம், ஆசார்யவரணம், அங்குரார்பணம், மஹ சாந்தி ஹோமம், சாற்றுமுறை உள்ளிட்டவைகள் நடைபெற்றது. மேலும் நடைபெற்ற யாகசாலை பூஜையில் புனித நீர் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிறகு வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக மூல மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது. பிறகு மாலை சீதா ராமர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

More Stories
கோவை
புதுவை முத்தியால்பேட்டை பெரியபாளையத்தம்மன் தேவஸ்தான 106-வது ஆண்டு ஆடித்திருவிழா: இன்று நான்காம் நாள் நிகழ்ச்சி!
திருவண்ணாமலை திருவாசக தெய்வீக மாநாடு: புதுவையில் பத்திரிகையாளர் சந்திப்பு