மேலும் 12 வருவாய் துறை ஊழியர்கள் கடந்த இரண்டு மாதங்களில் G-Pay மூலம் பெற்ற சுமார் 10 லட்சம் ரூபாய் குறித்தும் தீவிர விசாரணை.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் ஈஸ்வரி தலைமையிலான 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று மாலை 5 மணி அளவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த 15-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் 6 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற தீவிர சோதனையில் கணக்கில் வராத 57 ஆயிரத்து 950 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.
மேலும் அவர்களின் செல்போன்களை ஆய்வு செய்ததில் 12 வருவாய் துறை ஊழியர்கள் கடந்த இரண்டு மாதங்களில் G-pay மூலம் பெற்ற சுமார் 10 லட்சம் ரூபாய் குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு எழுத்துப்பூர்வமான விளக்கம் கேட்டு பெற்று சென்றனர்.மாலை 5 மணி முதல் இரவு 11.30 மணி வரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட சோதனையின் காரணமாக மேல்மலையனூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்