June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மேல்சித்தமூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

செஞ்சி ஏப் 28
விழுப்புரம் மாவட்டம் வல்லம் வட்டாரம் மேல் சித்தாமூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மலேரியாதினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் செந்தில்குமார். உத்தரவின் பேரில் நடைபெற்றது
நிகழ்ச்சிக்குவளம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பத்மஷா தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் வல்லம் வட்டாரத்தைச் சேர்ந்த மருத்துவ அலுவலர்கள் சுகாதாரப் பணியாளர்கள் மலேரியா நோயின் தாக்கம் பற்றியும் மலேரியா நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்புரையாற்றினர்.
விழிப்புணர் நிகழ்ச்சியில் செஞ்சி அஞ்சலை அம்மாள் நர்சிங் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு மலேரியா நோய் பற்றி நாடகம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இறுதியில் மலேரியா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
வல்லம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில்
மருத்துவர்கள் சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்