புதுச்சேரி, ஏப்ரல் 27:
புதுச்சேரி லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் திரு. ஜோஸ் சார்லஸ் மாட்டின் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக நலன் சார்ந்த பல்வேறு உதவிகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பாக முன்னெடுக்கப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, சமூக சேவை அன்னை தெரசா இளைஞர்கள் அறக்கட்டளை சார்பில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகில் வைத்து ஏழை எளிய மக்கள் மற்றும் நோயாளிகள் பயன்பெறும் வகையில் சுமார் 200 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு லட்சிய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி துணைத் தலைவர் சர்மா மற்றும் தொண்டரணி துணைத் தலைவர் வேல்முருகன் ஆகியோர் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு உணவை வழங்கினர்.
தங்கள் கட்சியின் தலைவரின் பிறந்தநாளை, மக்களுக்கு உதவும் வகையில் அன்னதானம் வழங்கி கொண்டாடிய கட்சி நிர்வாகிகளின் இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்