புதுச்சேரி, மார்ச் 07, 2026:
இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நோயைக் கண்டறிவதில் நிலவும் சவால்கள் குறித்து சென்னை பிரஸ்ட் சென்டர் (Chennai Breast Centre) முக்கிய விழிப்புணர்வு தகவல்களை வெளியிட்டுள்ளது.
தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் பரிசோதனைகளை மேற்கொள்வதால் நோய் கண்டறிதலில் தாமதமும், சிக்கல்களும் ஏற்படுகின்றன. குறிப்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மேம்பட்ட பரிசோதனை வசதிகள் இல்லாதது ஒரு முக்கிய காரணமாகும். இது குறித்து மையத்தின் முதுநிலை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா கூறுகையில்:
“மருத்துவரின் நேரடிப் பரிசோதனை, ஸ்கேனிங் மற்றும் திசுப் பரிசோதனை (Biopsy) ஆகிய மூன்றும் ஒரே கூரையின் கீழ் வழங்கப்படுவதன் மூலமே துல்லியமான மற்றும் விரைவான நோய் கண்டறிதலைச் சாத்தியமாக்க முடியும்.”
அண்மையில் 12,000 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், வெளியில் செய்யப்படும் திசுப் பரிசோதனைகளில் 25% பேருக்கு மறுபரிசோதனை தேவைப்படுவதும், அவர்களில் 62% பேருக்குப் புற்றுநோய் உறுதி செய்யப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மார்ச் 2026 மாதம் முழுவதும் அதிநவீன ‘3D டிஜிட்டல் டோமோகிராபி மேமோகிராபி’ பரிசோதனை மூன்றில் ஒரு பங்கு (1/3) கட்டணத்தில் வழங்கப்படுகிறது.
புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், சிதம்பரம் மற்றும் திண்டிவனம் பகுதி மக்கள் இலவச மருத்துவ ஆலோசனைகளைப் பெற +91 99400 49034 என்ற பிரத்யேக உதவி எண்ணை சென்னை பிரஸ்ட் சென்டர் அறிமுகப்படுத்தியுள்ளது.
பிளாஸ்டிக் மற்றும் புனரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கட் ராமகிருஷ்ணன் பேசுகையில், இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளதாகவும், இதில் 55% பேர் பெண்கள் என்றும் குறிப்பிட்டார்.
விழிப்புணர்வு இன்மை காரணமாகப் பலர் மார்பகத்தை முழுமையாக அகற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஆனால், ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் மார்பகத்தைப் பாதுகாக்கலாம்.
மார்பகத்தை அகற்றும் போதே நோயாளியின் சொந்த திசுக்கள் அல்லது சிலிக்கான் இம்ப்ளான்ட்டுகள் மூலம் மார்பகப் புனரமைப்பு செய்ய முடியும். இந்த நவீன சிகிச்சையின் வெற்றி விகிதம் 99% ஆகும்.
சிகிச்சை முடிந்து குணமடைந்த பிறகான வாழ்க்கை முறையை மேம்படுத்த ‘ஹகுனா மடாடா’ என்ற பெயரில் ஒரு தன்னார்வ சேவையை இந்த மையம் நிறுவியுள்ளது. இது புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கு உணர்வு ரீதியான ஆதரவையும், துல்லியமான தகவல்களையும் வழங்கி அவர்களின் நீண்ட கால நல்வாழ்வை உறுதி செய்கிறது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்