August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தொடர்ந்து களவு போவதாக அடுத்தடுத்து கிடைத்த புகாரை தொடர்ந்து
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் செஞ்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்
ரமேஷ்ராஜ் மேற்பார்வையில்
செஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் விநாயகமுருகன் உதவி ஆய்வாளர் வீரமணி மற்றும் தலைமை காவலர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து எதிரிகள் தேடப்பட்டு வந்த நிலையில்
நேற்று செஞ்சி to திருவண்ணாமலை புறவழிச் சாலையில் வாகனத் தணிக்கை மேற்கொண்டதில்
கீழ்கண்ட அடையாளம் காணப்பட்டு களவாடப்பட்ட 13 இரு சக்கர வாகனங்கள் மற்றும் எதிரிகள் இருசக்கர வாகனம் 1 என மொத்தம் 14 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டம் ஆவூர் அடுத்த நடுபட்டு கிராமத்தை சேர்ந்த
தனுஷ் என்கிற தனசேகரன் வயது 19,
ஆவூர் காந்தி நகர்
சையது உசேன் வயது 32, ஆவூர் ஜே.ஜே நகர்
.ரோஷன் பாட்ஷா 18, ,
மற்றும் 17 வயதுடைய சிறுவன். என தெரியவந்தது இவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்