மேலும், ஏழை எளிய மக்களுக்கான எளிமையான ஆட்சியை முன்னெடுக்கும் நமது கழகத்தின் கொள்கைக்கு இணங்க, மாலை அணிவித்தல், பூங்கொத்து வழங்குதல், சால்வை அணிவித்தல் போன்ற மரியாதை நிகழ்வுகளை தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அதற்கு பதிலாக, ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு துணை நிற்கும் வகையில் நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் போன்ற கல்வி உபகரணங்களை வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. உங்களின் இந்த செயல் படிக்கும் மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்
“மக்கள் சேவையே முதன்மை ; எளிமையே நமது அடையாளம்” என மணப்பாறை சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக எம்.எல்.ஏ. ரா. கதிரவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்