June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் காவல்துறை வாகன ஆய்வு நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மே 24

கள்ளக்குறிச்சி ஆயுதப்படை மைதானத்தில் மாதாந்திர காவல்துறை வாகன ஆய்வு மற்றும் வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது, இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.ஷஹ்னாஸ் ஆய்வு மேற்கொண்டு, வாகன பராமரிப்பு மற்றும் வாகன விதிகளை பின்பற்றுதல் குறித்து அறிவுரைகள் வழங்கினார், மேலும் கவாத்துப் பயிற்சியில் உள்ள காவலர்களுக்கு பொதுமக்களுடன் அணுகும் முறைகள் மற்றும் ஒவ்வொரு காவலரும் பொறுப்புணர்வோடு பணியாற்றவும், உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.

மேலும் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து அதனை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கூறினார்கள்.