June 13, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மக்களுக்கான பணிகளை செய்வது மட்டுமே எங்கள் சிந்தனை…

ஈரோடு முள்ளம் பருப்பில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி எம்எல்ஏ சண்முகன் பேட்டி…

ஈரோடு. ஜூன். 12

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களின் குறைகளை கேட்டு அதற்கு தீர்வு காணும் வகையில், முள்ளம் பரப்பு பகுதியில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது இதில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள எட்டு தொகுதிகளில் ஐந்து தொகுதிகள் தமிழக வெற்றி கழகம் கைப்பற்றியது. இதில் கோபிசெட்டிபாளையத்தில் வெற்றி பெற்ற கே எஸ் செங்கோட்டையன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராகவும், ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற விஜய் பாலாஜி கைத்தறி துணி நூல் மற்றும் கதர் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் மாவட்டத்திற்கு உட்பட்ட மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட இன்ஜினியர் சண்முகம் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து தான் வெற்றி பெற்ற நாள் முதல் எம்எல்ஏ சண்முகன் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வுகள் மேற்கொண்டு, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். மேலும் பொதுமக்கள் நேரடியாக கொடுக்கும் மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர் உயர் அதிகாரிகளுக்கு அவர் பரிந்துரை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முள்ளம் பரப்பு பிஆர்டி என்ற தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை மனுக்களாக கொடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சண்முகன் தெரிவித்த தகவல்.

மக்கள் விரும்பிய மக்கள் தலைவர், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் இன்றைக்கு முதலமைச்சராகி சரியாக ஒரு மாதம் ஆகிறது.

இந்த ஒரு மாதத்தில் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டத்திற்கான உத்தரவுகளை அவர் போட்டுள்ளார். மேலும் எங்கள் கட்சியில் வெற்றி பெற்ற ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் மக்களுக்கான பணிகளை சிறந்த முறையில் செய்ய வேண்டும் என முதல்வர் எங்களுக்கு உத்தரவு போட்டு உள்ளார்.

அதன்படி மக்களுக்கான பணிகள் மட்டுமே எங்கள் சிந்தனையில் இருந்து வருகிறது. அதனால் வரும் காலங்களில் மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் சிறப்பான முறையில் இந்த அரசு செயல்படுத்தும்.

இவ்வாறு மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சண்முகன் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.