போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில், கட்சியின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான தியாகி அஞ்சலை அம்மாளின் பிறந்தநாள் விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இவ்விழா போச்சம்பள்ளி ஒன்றிய கழகச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முரளி விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நிகழ்வின் தொடக்கமாக, தியாகி அஞ்சலை அம்மாளின் திருவுருவப் படத்திற்கு மாவட்டச் செயலாளர் முரளி விஜய் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதோடு, பட்டாசுகள் வெடித்து உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சத்யராஜ், பர்கூர் மத்திய ஒன்றியச் செயலாளர் சிவப்பிரகாஷ், இணைச் செயலாளர் திருப்பதி, ஒன்றியப் பொருளாளர் சூர்யா மற்றும் ஒன்றியச் செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, முத்துராசு. சண்முகம், சுதாகர்.அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், ஒன்றியம், கிளை நிர்வாகிகள் மற்றும் தவெக தொண்டர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் முபாரக் 8428723357

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!