June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்..

255 மனுக்கள் வரப் பெற்று இருந்த நிலையில் மேல் நடவடிக்கைக்கு ஆட்சியர் உத்தரவு..

ஈரோடு. ஜூன். 02

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 255 மனுக்கள் வரப்பெற்றது. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டார்.

வாரம் தோறும் திங்கள் கிழமை காலை 10 மணி அளவில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், பொது மக்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று காலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்திருந்து தங்களின் குறைகளை மனுக்களாக கொடுத்தனர்.

இதில் முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை மகளிர் உரிமைத் தொகை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகள் கேட்டு பொதுமக்கள் மனு கொடுத்தனர். மேலும் இலவச வீட்டு மனை வீட்டுமனை பட்டா சாலை வசதி, குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி மற்றும் பல்வேறு துறைகளின் கீழ் வழங்கப்படும் நலத்திட்டங்கள் சார்ந்த உதவி, காவல்துறையில் கொடுக்கப்பட்டிருக்கின்ற புகார் மனுக்கள் மீது தீர்வு காணும் நடவடிக்கை ஆகியவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் கந்தசாமி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பல்வேறு நல திட்டங்களையும் ஆட்சியர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு. சாந்தகுமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.