வந்தவாசி, ஏப் 26:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை நூலகம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக புத்தக தினவிழா சிறப்பு உரையரங்கம் நூலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு மூன்றாம் நிலை நூலகர் சங்கர் தலைமை தாங்கினார். வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க துணை தலைவர் கவிஞர் முகமது அப்துல்லா, சமூக ஆர்வலர் பொன்னம்பலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, ஓய்வுபெற்ற வட்டார கல்வி அலுவலர் புலவர் ந.பானு பங்கேற்று, புத்தக வாசிப்பின் அவசியம் குறித்தும், நூலகப் பயன்பாட்டின் அவசியம் குறித்தும் விளக்கினார். மேலும் புத்தகங்களை வாசிப்போம்; மனிதர்களை நேசிப்போம் என்ற கொள்கையை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். நிகழ்வில் ஓய்வுபெற்ற டிஇஓ உதவியாளர் ஜெயக்கண்ணு, சமூக ஆர்வலர் சித்திக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். புத்தக வாசிப்பு குறித்த பேச்சு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் நூலக துப்புரவு பணியாளர் புண்ணியகோட்டி நன்றி கூறினார்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!