June 13, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மொடக்குறிச்சி தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த மதிமுக வேட்பாளர் சா.செந்தில்நாதன்.

வாக்காளர்களுக்கு கோடான கோடி நன்றி என அறிவிப்பு..

ஈரோடு. ஏப்ரல். 26

நடைபெற்று முடிந்த மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மதிமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட எனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்குந் நன்றி தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக கட்சிக்கு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி ஒதுக்க பட்டது. அங்கு வேட்பாளராக சா. செந்தில்நாதன் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்.

இதற்காக மதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் தனது வேட்பு மனுவை மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்த கையோடு, தொகுதி முழுவதும் தனது பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டார்.

இந்த நிலையில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தொகுதிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ எம்பி உள்ளிட்ட முக்கிய கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.

அதோடு தொகுதியில் தனக்காக உதயசூரன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு பிரச்சாரம் முடியும் நாள் வரை தனக்காக தேர்தல் பணியாற்றிய திமுக, தேமுதிக, மதிமுக விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கும், குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் சா. செந்தில்நாதன் அறிக்கைகள் மூலமாக தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்