இதயா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி 22வது ஆண்டு விழா லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும் காமராஜ் நகர் தொகுதியின் எம்.எல்.ஏ.
ஜோஸ் சார்லஸ் மார்டின் பங்கேற்றார்,
நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அவரை கல்லூரி முதல்வர் அருட்சகோதரி பாத்திமா பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.
விருந்தினரை வரவேற்கும் விதமாக மாணவிகள் பாரம்பரிய பரதநாட்டியம் ஆடி அசத்தினர். மேலும் புதுச்சேரி முழுவதும் அன்னதானம், குடிநீர் சுத்திகரிப்பு, தூர்வாரும் பணிகள், மாணவர்களுக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி மற்றும் மீனவர்களுக்கு செய்யப்பட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்து மெகா திரையில் வீடியோ மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து பேராசிரியர் கலைவாணி வரவேற்புரை ஆற்றினார். பின்னர் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி பாத்திமா, ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களுக்கு பொன்னாடை மற்றும் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக விளங்கிய மாணவர்களுக்கு இதயாவின் பெருமை என்ற பதக்கங்களை ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கி பாராட்டினார். மேலும் மாணவர்களின் பெற்றோருக்கும் கவுரவ பரிசுகள் வழங்கினார்.
கல்லூரி முதல்வர் அருட்சகோதரி பாத்திமா பேசுகையில்,
180 ஆண்டுகளுக்கு முன்பு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக இந்த சபை தொடங்கப்பட்டது. அப்போது கல்விக்காக நடைபெற்ற புரட்சியைப் போல தற்போது ஜோஸ் சார்லஸ் மார்டின் சமூக முன்னேற்றத்திற்காக புரட்சிகரமான பணிகளை செய்து வருகிறார். அவர் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை; மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளார். புதுச்சேரியை சிங்கப்பூர் போல மாற்ற அவர் மேற்கொள்ளும் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்,” என்றார்.
தொடர்ந்து மாணவர்களிடையே பேசிய ஜோஸ் சார்லஸ் மார்டின், “ஒருகாலத்தில் மாணவராக இருந்த நான் இன்று மாணவர்களை ஊக்குவிக்கும் மேடையில் நிற்பது மகிழ்ச்சியாக உள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் சிந்தனையில் வளர்ந்தவன் நான். இளைஞர்களே இந்தியாவின் வளர்ச்சி. இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்; மாற்றத்தை உருவாக்க முன்வர வேண்டும்.
2050ஆம் ஆண்டுக்குள் புதுச்சேரியை சிங்கப்பூரைப் போன்ற முன்னேற்ற மாநிலமாக மாற்றும் நோக்கில் CBG நிறுவனத்தின் மூலம் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. மாணவர்கள் படித்து வேலைக்கு செல்வதை மட்டும் இலக்காக கொள்ளாமல், தொழில் முனைவோராக உருவாக முயற்சிக்க வேண்டும். புதிய சிந்தனைகளுடன் சமூகத்திற்கு என்ன செய்யலாம் என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டும்,” என பேசினார்.
மேலும் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி மற்றும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகியோருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!