புதுச்சேரி:
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட வள்ளலார் வீதி மற்றும் மேட்டு வீதியில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைத்தல் மற்றும் வாய்க்கால்களை மேம்படுத்தும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.
வள்ளலார் வீதி மற்றும் மேட்டு வீதி சிமெண்ட் கான்கிரீட் சாலை மற்றும் வாய்க்கால் மேம்படுத்துதல்.
ஒப்பந்தத் தொகை: ரூ. 35,34,432/-
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (2025 – 26).
இந்நிகழ்ச்சிக்கு நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. J.விவிலியன் ரிச்சர்ட்ஸ் MLA அவர்கள் தலைமை தாங்கி, பணிகளை முறைப்படி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை மற்றும் வடிகால் வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இப்பணிகளை ஓம் ஸ்ரீ சாய்ராம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்