*புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி மக்களுக்கு நலதிட்ட உதவிகளை லட்சிய ஜனநாயக கட்சி நிறுவனத்தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கினார்.*புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி மக்களுக்கு பல்வேறு கட்டங்களாக லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் – இன்று லட்சிய ஜனநாயக கட்சி நிறுவனத்தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் ரெய்ன்போ நகர், சுதந்திர பொண்விழா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், பிரஷர் குக்கர், மிக்சி, மின் அடுப்பு, டவா உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களை வழங்கினார். உடன் பொதுச்செயலாளர் துரைசாமி, பிரபாகரன், JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார், மண்டல பொதுச்செயலாளர்கள் விஜய்ராஜ், மாநில செயலாளர் ரவி ராஜாராம் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

More Stories
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஏனாம் தொகுதி நிர்வாகிகள் பட்டியல்ஆர் எல் வெங்கட்ராமன் வெளியிட்டார்.
கொங்கு மண்டலத்தில் ஹாட் டாப்பிக் – சேலம் தவெக மீட்டிங்கில் செங்கோட்டையனுக்கு அவமரியாதையா!?.
பாரதிய ஜனதா கட்சி பிரச்சார பிரிவு சேலம் பெருங்கோட்டம் நடத்தும் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் சேலத்தில் சிறப்பாக நடைபெற்றது.