June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வில்லியனூர் செந்தமிழ் நகரில்ரூ. 42 லட்சம் செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணிஎதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் !

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதி வில்லியனூர் பாண்டியன் நகர் கிளைக்கு உட்பட்ட செந்தமிழ் நகர் பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 42 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் மேற்கொள்ளப்பட உள்ள பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

இதில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, தார்ச்சாலை அமைக்கும் பணியை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பிரபாகரன், உதவிப் பொறியாளர் சத்தியநாராயணா மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் திமுக கிளைச் செயலாளர் மிலிட்டரி முருகன், ஏகாம்பரம், பிரபு, செல்வராஜ், சுரேஷ், சிவா, முரளி, தனசேகரன், சுசீந்திரன், உஷா, பாரதி, புஷ்பானந்தம், ஜெகதீசன், திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், அவைத்தலைவர் ஜலால் ஹனீப், வர்த்தகர் அணி அமைப்பாளர் ரமணன், விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் ஆறுமுகம் என்கிற செல்வநாதன், தொமுச தலைவர் அங்காளன், மாநில துணை அமைப்பாளர்கள் காசிநாதன், சரவணன், ராமதாஸ், கோபி, தொகுதி துணைச் செயலாளர் அரிகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் அக்பர், எம்.எஸ். முரளி, கிளைச் செயலாளர்கள் ராஜ், சபரிநாதன், தங்கராசு, ரகுராமன், திலகர், கமல்பாஷா, கார்த்திகேயன், பாலு, சத்தியமூர்த்தி, பரதன், பாண்டியன், பாலமுருகன், கோதண்டம், அபிமன்னன், கோவிந்தராசு, சக்தி, கரிகாலன், நாகமணி, அசார், தினேஷ், அருண், சந்தோஷ், ஸ்ரீதர், முருகன், வேலு, நடராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.