February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் சீருடையில் வந்து அசத்திய எஸ்எம்சி குழுவினர்

வந்தவாசி, டிச 06:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சீ.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெள்ளார் வட்டார கல்வி அலுவலர் கோ.குணசேகரன், ஆசிரியர் பயிற்றுநர்கள் செந்தில் முருகன், பாலாஜி, கல்வியாளர் பொன். சந்திரசேகரன், தலைமை ஆசிரியர் ஆர்.நம்பெருமாள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் தமிழ்ச் செல்வி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் அடிப்படை வசதிகள், கற்றல் திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஒரே மாதிரி சீருடையில் வந்து எஸ்எம்சி குழுவினர் அசத்தினர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp