விழுப்புரம் டிச 22
விழுப்புரம் மாவட்டம் சின்ன வளவனூரில் வீடு தொண்டு நிறுவன இயக்குனர் ஜெயபாரதி மூலம் நபார்டு வங்கி சார்பில் கோமாதா விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு கரவை மாடுகள் பராமரிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர் ரவிசங்கர் மூலம் நடைபெற்ற இப்பயிற்சியில் பால் உற்பத்தி பெருக்குவதற்கான வழிமுறைகள் கறவை மாடுகளுக்கான உணவுகள் தடுப்பூசிகள், காப்பீடு, இயற்கை பேரழிவிலிருந்து கறவை மாடுகளை காப்பது மற்றும் கறவை மாடுகளுக்கு கொட்டைகள் அமைத்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் அருணா திவாகர் செய்திருந்தார். ஒருங்கிணைப்பாளர் சுமதி நன்றி கூறினார்.இதில் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

More Stories
உள்ளாட்சித் துறையில் ஒரே நேரத்தில் 41 இடங்களில் விஜிலென்ஸ் போலீஸாரால் நடத்திய ரெய்டில்.. ரூ.58 லட்சம் சிக்கியது!
ஈரோடு மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை..