வந்தவாசி மே 02:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தேரடி பகுதியில் தவெக சார்பில் மக்கள் சேவகர் தியாகி அஞ்சலை அம்மாள் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் கார்த்திக், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் திருவாசகமணி, நகர செயலாளர் வெங்கடேசன், நிர்வாகிகள் ஜல்லி குமார், இளையராஜா, மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்