விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்றத் தொகுதி மேல்மலையனூர் தெற்கு ஒன்றிய அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
ஈயக்குணம் கூட்டு சாலையில் அமைக்கப்பட்டிருந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் திருஉருவப்படத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் பாலகிருஷ்ணன்,மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது அதை தொடர்ந்து
ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரும் ஒன்றிய கவுன்சிலர் ஈயக்குணம் முரளி ஏற்பாட்டில் ரூபாய் 2 லட்சம் மதிப்பீட்டில் 600 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் கணேசன், கோவிந்தசாமி, சேட்டு, பெரியசாமி, ராஜேஷ், சாமி கண்ணு, பெருமாள், சிவக்குமார், தேவராஜ், வெங்கடேசன், ராஜேஷ், பட்டுசாமி, ராஜேஸ்வரி, உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!