விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இயங்கி வரும் உதவும் உள்ளங்கள் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் செஞ்சியில் மகளிர் தின மாரத்தான் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டனர். முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு முதல் பரிசு ரூ. 5000/-, இரண்டாம் பரிசு ரூ. 2000/-, மூன்றாம் பரிசு 1000/- வழங்கப்பட்டது. முதல் 10 இடங்கள் பிடித்தவர்களுக்கும் ஆறுதல் பரிசு அளிக்கப்பட்டது. மேலும் அதிக வயது உடையோருக்கும் மற்றும் மிகக் குறைந்த வயது உடையவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இல்லோடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி ஸ்டாலின் கூறியதாவது : பெண்கள் எல்லாத் துறைகளிலும் சாதித்து வருகின்றனர். அதேபோன்று விளையாட்டிலும் இன்றளவிலும் சாதித்து வருகின்றனர். இன்று மாரத்தானில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் உலக மகளிர் தின வாழ்த்துக்களை கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் முட்டத்தூர் சுரேந்தர் நமது சிலம்பம் குழு மாணவர்கள் வீர சாகச நிகழ்ச்சிகள், சிலம்பம், வாள் சண்டை மற்றும் அடிமுறை போன்ற தமிழர்களின் பாரம்பரிய கலைகளை நிகழ்த்தி காட்டினர்.
நிகழ்ச்சியில் மேலச்சேரி, தமிழன் சீனு, ஆக்ருதி பள்ளி ஆசிரியை பரமேஸ்வரி, டாக்டர் ஜோதி, கோகுல் டிஜிட்டல் உரிமையாளர் ஜெயந்தி சுந்தர், கவுன்சிலர் கம்சலா, செஞ்சி ஆய்வாளர், லயன்ஸ் கிளப் தலைவர் நவநீதகிருஷ்ணன், செஞ்சி சிறப்பு வருவாய் ஆய்வாளர் கண்ணன், செஞ்சி வழக்கறிஞர் சக்திராஜன், அப்பம்பட்டு சையது ஸ்வீட் மிட்டாய் சையது உஸ்மான், வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், செஞ்சி சேவை தமிழ் லாரான்ஸ், தினேஷ், தவெக துணை நகர செயலாளர் ராஜேஷ் மற்றும் ராஜசேகர், ஜெயசீலன், கிளாட்வின், இசக்கின், ராஜேஷ், ஹீனா, மற்றும் பலர் கலந்து கொண்டனர். உதவும் உள்ளங்கள் அறக்கட்டளை நிறுவனர் ஜான் சத்தியசீலன் நன்றியுரை கூறினார்.
செஞ்சி உதவும் உள்ளங்கள் அறக்கட்டளை சார்பில் மகளிர் தின விழா மாரத்தான் :

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.