August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

செஞ்சியில் உதயநிதி ஸ்டாலின் கழுதை கண்டித்து திமுகவினர் தரையில் படுத்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்

தஞ்சாவூரில் காவேரி பிரச்சனை குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பெண்களைப் பற்றி தரகுறைவாக பேசியதை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நான்கு முனை சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உதயநிதி ஸ்டாலின் கழுதை கண்டித்து தரையில் படுத்துக்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தானை குண்டு கட்டாக தூக்கிக்கொண்டு பேருந்தால் எற்றி கைது செய்தனர்.

இதனால் சுமார் அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.