August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

போச்சம்பள்ளியில் பரபரப்பு! தவெக தலைவர் விஜய்யைக் கண்டித்து திமுகவினர் சாலை மறியல் – 50க்கும் மேற்பட்டோர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி நான்கு வழிச் சாலையில், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யைக் கண்டித்து திமுகவினர் திரளாகப் பங்கேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி நான்கு வழிச் சாலைப் பகுதியில் திமுகவினர் கண்டனப் போராட்டம் நடத்தினர்.திமுக ஒன்றிய செயலாளர் சந்த மூர்த்தி அவர்கள் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒன்று திரண்டு போச்சம்பள்ளி நான்கு வழிச் சாலையில் அமர்ந்து தவெக தலைவர் விஜய்யைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். திடீரென நடத்தப்பட்ட இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.​காவல்துறை நடவடிக்கை & கைது:
சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போச்சம்பள்ளி காவல் துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், போராட்டத்தைக் கைவிட மறுத்து தொடர்ந்து கோஷங்களை எழுப்பியதால், போக்குவரத்து பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒன்றிய செயலாளர் சந்த மூர்த்தி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
​கைது செய்யப்பட்ட அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் போச்சம்பள்ளி நான்கு வழிச் சாலைப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.