FIFA கால்பந்து உலக கோப்பை போட்டி நடைபெறும் நிலையில் போதைப் பொருளுக்கு எதிராக பிரம்மாண்ட கால்பந்தை வடிவமைத்து
48 நாடுகளின் கொடிகளுடன் ஒன்று மாணவ மாணவிகள்
விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று நிலையில் அதனை முன்னிறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் தனியார் அமைப்புகள் கல்வி நிறுவனங்கள் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள Camford International பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பிரம்மாண்டமான 10 அடி உயர கால்பந்து அமைப்பை மாணவர்கள் வடிவமைத்து போட்டியில் பங்கேற்ற 48 நாடுகளின் கொடிகளைப் ஏந்தியபடி மாணவ, மாணவிகள் ஒன்றுகூடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
“இலக்குகளைத் தேர்ந்தெடுங்கள், போதைப்பொருட்களை அல்ல” என்பதை கருப்பொருளாக கொண்டு நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் போதைப்பொருட்களுக்குப் பதிலாக, நோக்கம் மற்றும் ஆரோக்கியமான முயற்சிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. மேலும் இது தொடர்பாக விழிப்புணர்வு உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலும் மாணவ, மாணவியர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மோதும் இரு அணிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இந்த பிரமாண்டமான கால்பந்து பள்ளி வளாகத்தில் இரண்டு நாட்களுக்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ் மற்றும் தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் ஆகியோர், இளைஞர்களை அர்த்தமுள்ள இலக்குகளை நோக்கி வழிநடத்துவதன் முக்கியத்துவத்தையும், போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் அபாயங்கள் குறித்தும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்)
மாவட்டச் செய்தியாளர்
C. சத்யா

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!