July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி அரசு மற்றும் கல்வித்துறையின் சார்பாக கருவடிக்குப்பத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபத்தில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, 15.07.2026 (புதன்கிழமை) அன்று மாணவர்கள் தின விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் யானம் ஆகிய நான்கு பிராந்தியங்களைச் சார்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் பல்வேறு கல்வி சார்ந்த சுமார் 22 கண்காட்சி அரங்குகள் 15.07.2026 மற்றும் 16.07.2016 ஆகிய இரண்டு நாட்களுக்கு அமைக்கப்பட்டிருந்தன. இதில் புதுச்சேரியைச் சேர்ந்த வட்டம்-1ன் அரசு தொடக்கப்பள்ளி சோலை நகரின் சார்பாக ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள கோனார்க் சூரிய கோவில் மற்றும் அம் மாநிலத்தின் பாரம்பரிய உணவு, உடை, அணிகலன்கள், நடனம், கோவிலின் சிறப்பு அம்சங்கள், கலாச்சாரம் போன்றவைகளை வெளிப்படுத்தும் வகையில் இவ்வரங்கு சிறப்பாக முறையில் இடம் பெற்றிருந்தது. இந்நிகழ்ச்சியை புதுச்சேரியில் உள்ள சுமார் 25 அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் நேரில் சென்று, அவற்றின் சிறப்பம்சங்களை கேட்டு தெரிந்து கொண்டு, கண்டு களித்தனர். இவ்வரங்கின் பெரும் ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.சீனிவாசன் மற்றும் அப்பள்ளியின் ஆசிரியர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.