June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கோவை ஜே.கே.டி.சி அகாடமி கராத்தே வீரர்கள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்

கோவை ஜன:07

கோவை மாவட்டம், மத்திய அரசு இளைஞர்நலம் விளையாட்டுத்துறை அனுமதியுடன் நடைபெற்ற எஸ்ஜிஏடிஎஃப்
தேசிய தற்காப்பு கலைகள் விளையாட்டு போட்டிகள் – 2025 பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியத்தில் கடந்த டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இப்போட்டியை
பாண்டிச்சேரி மாநில அரசின் கூட்டுறவு மற்றும் நுகர்பொருள் துறை அமைச்சர். திருமுருகன் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்து சிறப்பித்தார்.

இதில் கோவை மாவட்டத்திலிருந்து
ஜேகேடிசி அகாடமி சார்பில் 129 வீரர் வீராங்கனைகளும் தலைமை பயிற்சியாளர் ஷிஹான் சிரில் வினோத் தலைமையில் 17 நடுவர்கள் கலந்து கொண்டனர்
5 வயது முதல் 25 வயது வரை நடைபெற்ற கராத்தே,சிலம்பம் யோகா,நடனம் ஆகிய போட்டியில் 2500 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர் இதில் கோவையை சேர்ந்த ஜேகேடிசி
அகாடமி மாணவர்கள் 31 வீரர்கள் தங்கப் பதக்கத்தையும்
42வீரர்கள் 2-வது பரிசும்
25வீரர்கள் 3-வது பரிசும்
மொத்தம் 98 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த ஓவரால் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர்
வெற்றி பெற்ற மாணவர்கள் சர்வதேச போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

முதல் பரிசு ஆர். அஷ்வின்,பி.பி. ஷஹானா,எஸ். சாய் பிரதிகா,பி. ரக்ஷனா ,பி. ஜாஸ்மிதா
2-ம் பரிசு எம்.அர்ஜுன்,எஸ். முகம்மது ராஷிக்,எஸ்.ஜீவா,
கனிழா,ஷார்வேஷ்
3-ம் பரிசு எஸ். யாதவ்,அனுதீப்,லியோனல் ஜோனா , எம்.எஸ்..விஜய் சங்கஜன்,எஸ். கனிஷ்கா,எஸ். ரிதிகா,எஸ்.சாந்தினி பிரியா, பி.அஸ்விதா,சுவாதி கார்த்திக்
உட்பட வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் சௌரிபாளையம் பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் ஜேகேடிசி பெற்றோர் சங்கத்தின் மூலம் பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் தலைமை பயிற்சியாளர் மற்றும் பயிற்சியாளர்களுக்கும்,மாணவர்களுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது நிகழ்ச்சியில் பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.