வந்தவாசி, மே 19:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் 25 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற மாணவர்களுக்கான கோடைகால இலவச பயிற்சி வகுப்புகளின் நிறைவுவிழா நேற்று கல்வி மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சர்புதீன் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை பிளோமினா, ஓவிய ஆசிரியர் பெ.பார்த்திபன், கணினி மைய நிர்வாகி எ.தேவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, மேனாள் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் எஸ்.குமார் பங்கேற்று மாணவர்களுடைய தனித்திறன் செயல்பாடுகளையும், கற்றல் திறன்களையும் விளக்கி பேசினார். மேலும் ஓவியம், யோகா, ஸ்போக்கன் இங்கிலீஷ், திருக்குறள் போட்டிகள், கராத்தே உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற 65 மாணவர்களுக்கு ‘வளர் இளம் மேதை’ என்ற விருதுகளை வழங்கி பாராட்டினார். மேலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் இந்தி ஆசிரியை டெல்லிபாய், ஸ்போக்கன் இங்கிலீஷ் ஆசிரியர் கு.சதானந்தன், முதுகலை ஆசிரியர் க.பூபாலன், பட்டதாரி ஆசிரியர் கபிலன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் ஆசிரியர் மகாவீர் நன்றி கூறினார்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!