கோவை-ஜன:11
கணியூர் பகுதியில் உள்ள பார்க் கல்லூரியில் தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் திருவிழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கல்லூரி வளாகத்தில் மண் பானையில் பொங்கல் பொங்க, “பொங்கலோ பொங்கல்” என முழக்கமிட்டு மாணவர்கள் சூரிய வழிபாடு செய்தனர்.
கிராமத்து திருவிழாவை நினைவூட்டும் வகையில் உரியடித்தல், கயிறு இழுத்தல், கும்மி ஆட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொங்கல் விழாவிற்கு தனித்துவம் சேர்த்தது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக விளையாட்டுப் பிரிவு மாநில செயலாளரும், கல்லூரியின் தலைமை செயல் அதிகாரியுமான அனுஷா ரவி கலந்துகொண்டு மாணவர்களை ஊக்குவித்தார்.
குறிப்பாக, கொங்கு மண்ணின் பாரம்பரிய துடும்பு இசை முழங்க, அதற்கேற்றவாறு மாணவ-மாணவியர் அனைவரும் உற்சாகமாக நடனமாடிய பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பெருமைப்படுத்தும் விதமாக இந்த கொண்டாட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்