செஞ்சி ஜூலை 18
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த குறிஞ்சிப்பை கிராமத்தில் வடக்கு தாங்கள் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அமைச்சர் அம்மன் திருக்கோவிலில் 13 ஆம் ஆண்டு ஆடி பெருவிழா வெகு விமர்சியாக தொடங்கியது
ஆடி மாதம் முதல் வெள்ளி தொடங்கி சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் ஆடி பெருவிழா நடைபெற உள்ள நிலையில் இன்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி பந்தக்கால் நடுதல் காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் கணபதி ஹோமத்தில் குலதெய்வம் லட்சுமி ஹோமம் பூர்ணாஹுதி நடைபெற்று மேள தாளம் முழங்க கலசம் புறப்பட்டு கோவிலில் வளம் வந்து அம்மனுகு கலச நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்ற சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் .
தொடர்ந்து காப்பு கட்டுதல் பந்த கால் நடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து சனிக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் தேவாரதனை காண்பிக்கப்படும் எனவும்
ஞாயிற்றுக்கிழமை
காலை 8 மணிக்கு அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இருந்து மேல தாகங்கள் முழங்க அருள்மிகு அமைச்சர் அம்மன் திருக்கோவிலுக்கு கழகத்துடன் முளைப்பாரி பால்குடம் தாய் வீட்டுக்கு சீதன ஊர்வலம் நடைபெற்று பாலபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் தீபாராதனை காண்பிக்கப்பட்டு
இரவு அருள்மிகு அம்மச்சார் அம்மன் வீதி உலா நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்தனர்.
குறிஞ்சிப்பை வடக்கு தாங்கள் அம்மச்சார் அம்மன் கோவிலில் 13 ஆம் ஆண்டு ஆடி பெருவிழா முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி

More Stories
கோவை
புதுவை முத்தியால்பேட்டை பெரியபாளையத்தம்மன் தேவஸ்தான 106-வது ஆண்டு ஆடித்திருவிழா: இன்று நான்காம் நாள் நிகழ்ச்சி!
திருவண்ணாமலை திருவாசக தெய்வீக மாநாடு: புதுவையில் பத்திரிகையாளர் சந்திப்பு