கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் தென்பென்னை ஆற்றில் பிறந்த ஆண் குழந்தையை ஆற்று நீரில் அமுக்கி கொலை முயற்சி.அவ்வளியே வேறு ஒரு இறந்தவரின் உடலை தகனம் செய்ய சென்ற நீதி கதிர் எக்ஸ்பிரஸ் காலை நாளிதழின் கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளரான கவியரசு உடன் பயணித்த கோகுல்,பிரகாஷ் ஆகியோரின் உதவியுடன் கொலை முயற்சியை தடுத்து நிறுத்தி வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கொலை முயற்சி ஈடுபட்ட வேப்பனப்பள்ளி பகுதியை சேர்ந்த வயதான பெண் மற்றும் சுமார் 25மதிக்க தக்க ஆண் இருவரையும் பிடித்து காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.பிறந்த குழந்தை காவேரிப்பட்டிணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறது.
மருத்துவர் தரப்பில் குழந்தை உயிருடன் நலமாக இருக்கிறது என்று தகவல் கிடைத்துள்ளது.
குழந்தை இல்லாமல் சுற்றாத கோயில் சுற்றி பல இடங்களில் அலைந்து பல இலட்சக்கணக்கான பணத்தை செலவு செய்து வரம் கேட்டு தினம் தினம் கதரும் பெற்றோர் இப்படி பிறந்த பிஞ்சு ஆண் குழந்தை என்று பாராமல் கல் நெஞ்சம் படைத்த உயிரை கொள்ள துனிந்த இவ் இரண்டு கேடுகெட்ட இரு ஜென்மங்களை அரசாங்கம் நைய புடைத்து குழந்தைகள் இன்றி தவிக்கும் பெற்றோர் வலி என்ன என்று புரியும் படி பாடம் நடத்த வேண்டும் என்று பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.
மாவட்ட செய்தியாளர்:கவியரசு 99005 57307

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!