கள்ளக்குறிச்சி ஜூன் 12
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பத்மஜா, கள்ளக்குறிச்சி சட்டமன்றத் உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆகியோர் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பஸ் நிலையத்தின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வில் பஸ் நிலைய பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும். தண்ணீர் தேங்கினால் அதனை உடனுக்குடன் வெளியேற்ற வேண்டும். கட்டண கழிப்பறைகளில் அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். பஸ் நிலையம் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் புகார் எண்களை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும்.
பஸ் நிலையத்தினை துாய்மையாக பராமரிக்க வேண்டும். மேலும் பஸ் நிலையத்தில் பயணிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். ஆய்வில் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!