June 19, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1435-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி எதிர்வரும் 12.06.2026 முதல் 29.06.2026 வரை நடத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இ.பத்மஜா தகவல்.

கள்ளக்குறிச்சி ஜூன் 12

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் 1435-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி எதிர்வரும் 12.06.2026 முதல் 29.06.2026 வரை (அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் தவிர்த்து) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் நியமனம்
செய்யப்பட்ட கீழ்க்கண்ட வருவாய் தீர்வாய அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது.

திருக்கோவிலூர் வட்டத்தில் வருவாய் தீர்வாய அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வருவாய் தீர்வாய நாட்கள் 12.06.2026 மற்றும் 15.06.2026 முதல் 19.06.2026 வரையிலும்,
சங்கராபுரம் வட்டத்தில் வருவாய் தீர்வாய அலுவலர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் வருவாய் தீர்வாய நாட்கள் 12.06.2026 மற்றும் 15.06.2026 முதல் 17.06.2026 வரையிலும் வருவாய் தீர்வாயம்
நடத்தப்படவுள்ளது.

உளுந்தூர்பேட்டை வட்டத்தில் வருவாய் தீர்வாய அலுவலர் திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வருவாய் தீர்வாய நாட்கள் 12.06.2026 மற்றும் 15.06.2026 முதல் 19.06.2026
வரையிலும் 22.06.2026 முதல் 25.06.2026 வரையிலும் மற்றும் 29.06.2026 வரையிலும், வாணாபுரம் வட்டத்தில்
வருவாய் தீர்வாய அலுவலர் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வருவாய் தீர்வாய
நாட்கள் 12.06.2026, 15.06.2026 முதல் 19.06.2026 வரை மற்றும் 22.06.2026 முதல் 23.06.2026 வரையிலும், சின்னசேலம் வட்டத்தில் வருவாய் தீர்வாய அலுவலர் உதவி ஆணையர் (கலால்) தலைமையில் வருவாய் தீர்வாய நாட்கள் 12.06.2026 மற்றும் 15.06.2026 முதல் 19.06.2026 வரையிலும் வருவாய் தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

கள்ளக்குறிச்சி வட்டத்தில் வருவாய் தீர்வாய அலுவலர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்கள் தலைமையில் வருவாய் தீர்வாய நாட்கள் 12.06.2026, 15.06.2026
முதல் 19.06.2026 வரை மற்றும் 22.06.2026 முதல் 23.06.2026 வரையிலும் வருவாய் தீர்வாயம் நடத்தப்படவுள்ளது. கல்வராயன்மலை வட்டத்தில் வருவாய் தீர்வாய அலுவலர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் வருவாய் தீர்வாய நாட்கள் 12.06.2026 மற்றும் 15.06.2026 முதல் 17.06.2026 வரையிலும் வருவாய் தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை எதிர்வரும் 12.06.2026 முதல் 29.06.2026 வரை தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாட்களில் அளித்துக் கொள்ளலாம் என்றும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கமாக நடைபெறும் திங்கள் தின மக்கள்
குறைதீர்வு முகாமானது (GDP) 15.06.2026, 22.06.2026 மற்றும் 29.06.2026 ஆகிய தேதிகளில் நடைபெறாது
எனவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை சம்பந்தப்பட்ட வருவாய் தீர்வாய அலுவலரிடம் கொடுத்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இ.பத்மஜா தெரிவித்துள்ளார்.