ஏற்காடு : டிச 31
சேலம் மாவட்டம் ஏற்காடு மாரமங்கலம் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவருக்கும் சுமதி என்ற பெண்ணுக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இன்னிலையில் சுமதிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரது மகன் வெங்கடேஷ் வயது 23 என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்து கள்ளக்காதல் ஏற்பட்டது கடந்த 23ஆம் தேதி வீட்டில் இருந்த சுமதி காணவில்லை என்று அவரது கணவர் சண்முகம் என்பவர் புகார் அளித்ததை தொடர்ந்து ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் சுமதி வெங்கடேஷ் தனிமையில் இருந்த போது சுமதியின் செல்போனுக்கு வந்த அழைப்பு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வெங்கடேஷ் சுமதியின் துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்து கொட்டச்சேடில் இருந்து குப்பனூர் செல்லும் சாலையில் உள்ள சுமார் 200 அடி பள்ளத்தில் சாக்கு மூட்டையில் கட்டி வீசிவிட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது அதனை தொடர்ந்து அவரை கைது செய்து நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.


More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்