June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஏகணிவயல் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் தேர் பவனி கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு

அறந்தாங்கி ஜுன் 1
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள ஏகணிவயல் கிராமத்தில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு தேர் பவனி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

விழாவையொட்டி காலை முதலே ஆலயத்தில் சிறப்பு திருப்பலியும், வழிபாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித ஆரோக்கிய அன்னையின் திருவுருவம் எழுந்தருளச் செய்யப்பட்டு, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் செண்டை மேளங்கள் முழங்க ஏகணிவயல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவ மக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பக்தியுடன் வழிபட்டனர்.

தேர் சென்ற பாதைகளில் பக்தர்கள் மலர் தூவி வரவேற்பளித்ததுடன், சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்றன.

பெருவிழாவை முன்னிட்டு ஆலய வளாகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து மேற்கொண்டனர்.