பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழாவில் மாலை அணிவித்து மரியாதை..
ஈரோடு. ஜூலை
17
ஈரோட்டில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகள் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஆளுங்கட்சி முதல் அனைத்து அரசியல் கட்சிகளும் மறைந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருஉருவா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும், அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும் புகழ் வணக்கம் செய்து மக்களுக்கான அவரது சிறந்த பணிகளை நினைவு கூர்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களுக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திமுக, காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் பெருந்தலைவர் காமராஜரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து ஈரோட்டில் அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானாவில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் முழு உருவ வெங்கல சிலைக்கு, தமிழக வெற்றி கழகம், காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் சமீபத்தில் புதியதாக துவங்கப்பட்ட இலட்சிய ஜனநாயக கட்சியின் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் எம்எல்ஏ தலைமையில் இயங்கி வரும் அந்தக் கட்சி ஈரோட்டில் புதியதாக தடம் பதித்துள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவில் அக்கட்சியின் சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டத்தின், மாவட்ட செயலாளர் அருண்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்திருந்து பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கிழக்கு மாவட்ட செயலாளர் அருண்குமார், எங்களின் லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் எம்எல்ஏ தலைமையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
புதிய இயக்கம் என்றாலும் மக்களுக்கான பணிகளை சிறப்பாக செய்ய வேண்டுமென கட்சியின் தலைவர் எங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
அதன்படி ஈரோட்டில் மக்களுக்கான பிரச்சினைகளை முன்னெடுத்து அவர்களுக்கான பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். வருங்காலங்களில் இன்னும் சிறப்பாக மக்கள் பணி ஆற்றுவோம்.
இவர் ஈரோடு கிழக்கு மாவட்ட லட்சிய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் அருண்குமார் செய்தியாளர்கள் மத்தியில் இவ்வாறு தெரிவித்தார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்