விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கல்வி மாவட்டம்
செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளில் பல்வேறு அறக்கட்டளைகள் சார்பாக மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழுடன் கூடிய கேடயம் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கு பள்ளியின் உதவி உதவி தலைமை ஆசிரியர் ராமசாமி தலைமை வகித்தார். பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர்கள் ராஜேந்திரன் மற்றும் G.T.பாலசுப்பிரமணியன், பணி நிறைவு பெற்ற நடத்துனர் சண்முகம், பட்டதாரி ஆசிரியர் பூங்கொடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
சென்னை வேப்பேரி ஸ்ரீ சம்பவநாத் சேவா மண்டல் சார்பாக பள்ளியில் பயிலும் 1150 மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில், அளவுகோல், ஷார்ப்னர் பிஸ்கட், சாக்லேட் வழங்கப்பட்டது.
கோவை நாகரத்தினம் மாணிக்கம் அறக்கட்டளை சார்பாக சென்ற ஆண்டு பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு முறையே 3000, 2000, 1000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
செஞ்சி தேசிய நல்லாசிரியர் முத்துவேல் லோகநாயகி அறக்கட்டளை சார்பாக 12 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் சென்ற ஆண்டு பொதுத்தேர்வில் பாடத்தில் 100 சதவீத தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு உதவி தலைமை ஆசிரியர் குப்புசாமி நன்றி கூற நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஏழுமலை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்