வந்தவாசி, டிச 12:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நுழைவு வாயிலில் இபைலிங் முறையை கண்டித்து பெருந்திரள் மற்றும் பெருமுழக்கப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வி.ஜி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர்கள் நவாப் ஜான் விஸ்வநாதன் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இபைலிங் நடைமுறையில் உள்ள பொதுமக்களுக்கான பாதிப்புகள் குறித்து வழக்கறிஞர்கள் சா.இரா.மணி, சுரேஷ், ராமன், வைணவ வினோதினி மற்றும் பல்வேறு வழக்கறிஞர்கள் உரையாற்றினர். இந்த கூட்டத்தில் 60க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..