மணப்பாறை டிச 11
திருச்சி மிளகுபாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திருச்சி மாவட்ட உள்ளாட்சி தொழிலாளர்கள் ஏஐடியூசி சங்கத்தின் மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட உள்ளாட்சி தொழிலாளர்கள் ஏஐடியூசி சங்கத்தின் மாவட்ட தலைவர் இந்திரஜித் தலைமை வகித்தார் மாவட்ட துணை செயலாளர் ஜனசக்தி உசேன் , அருள் ஆரோக்கியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் நடைபெற்ற. வேலை கூறித்து பேசினார்
ஜனவரி மாதம் தர்மபுரியில் நடைபெறும் உள்ளாட்சி பணியாளர்கள் சம்மேளன மாநாட்டு பேரணியில் திருச்சி மாவட்டத்தின் சார்பில் அனைத்து தொழிலாளர்களும் பங்கேற்பது என்றும் பிரதிநிதிகள் ஏழு பேர் பங்கேற்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
தூய்மை பணியாளர்களுக்கு கொரானா காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு ரூபாய் 15000 சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவோம் என்ற அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் .
ஊரக பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்கள் பம்ப் ஆபரேட்டர்கள் வட்டார ஊக்குனர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி தொழிலாளர்களுக்கு அரசாணை எண் 62 ன்படி ஊதியம் வழங்க வேண்டும்.
மூன்றாண்டுகள் பணி முடித்த ஊரக பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் மணப்பாறை லால்குடி துறையூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!