புதுச்சேரி ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கட்சி வளர்ச்சியை கருத்தில் கொண்டு மாநில அளவில் பல அணிகளை உருவாக்குகின்ற வகையில் கடந்த ஞாயிறு அன்று மாநில மகளிர் அணிக்கு அமைப்பாளர் நியமனம் செய்து அறிவித்தோம். அதன் தொடர்ச்சியாக தற்போது மாநில இளைஞர் அணி மற்றும் மாநில மாணவர் அணிக்கு அமைப்பாளர்களை நியமித்து அறிவித்துள்ளோம்.
மாநில இளைஞர் அணி அமைப்பாளர்
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞர் அணி அமைப்பாளராக உருளையன்பேட்டை தொகுதியை சார்ந்த K. ராஜா அவர்களை நியமனம் செய்து அறிவித்துள்ளோம். திரு. K.ராஜா அவர்கள் சபரி டிஜிட்டல் எனும் பேனர் தயாரிப்பு செய்து கொடுக்கும் வியாபாரம் செய்து வருகிறார். மேலும் சமூக பணியில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். வியாபார ரீதியாக புதுச்சேரி மாநில மக்களுடனும், இளைஞர்களிடம் நல்ல தொடர்பு வைத்துள்ளவர். சமூக சேவகர். ஆகவே K. ராஜா அவர்களை மாநில இளைஞர் அணி அமைப்பாளராக நியமித்து உள்ளோம்.
மாணவர் அணி அமைப்பாளர்
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில மாணவர் அணிக்கு மாநில அமைப்பாளராக தட்டான்சாவடி தொகுதியை சார்ந்த திரு. ஆண்ரூ ஜோசப் அவர்களை மாணவர் அணியின் அமைப்பாளராக நியமித்து அறிவித்துள்ளோம்.
மாநில மாணவர் அணிக்கு அமைப்பாளராக நியமிக்கப் பட்டிருக்கும் திரு. ஆண்ரு ஜோசப் அவர்கள் BA.Bed.மற்றும் MA.MA படித்தவர். இன்றும் கூடுதலாக ஒரு எம் ஏ படித்து கொண்டிருப்பவர். மாணவர்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர். கல்வியில் சிறந்த ஆர்வம் கொண்டவர். அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் மத்தியில் நன்கு பழகி நல்ல தொடர்பு வைத்துள்ளவர். மாணவர்களின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தை பற்றி மிகுந்த அக்கறை கொண்டவர் என்கிற காரணத்தினால் அவரை மாணவர் அணியின் மாநில அமைப்பாளராக நியமித்து உள்ளோம். அறிவிப்பின் போது உடன் சிவக்குமரன், கோமதி, சுப்ரமணியன் , வாசுகி, முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆகவே கழக தொண்டர்கள் அனைவரும் ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞர் அணி மற்றும் மாநில மாணவர் அணி அமைப்பாளர்கள் இருவருக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்து கட்சி வளர்ச்சிக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

More Stories
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஏனாம் தொகுதி நிர்வாகிகள் பட்டியல்ஆர் எல் வெங்கட்ராமன் வெளியிட்டார்.
கொங்கு மண்டலத்தில் ஹாட் டாப்பிக் – சேலம் தவெக மீட்டிங்கில் செங்கோட்டையனுக்கு அவமரியாதையா!?.
பாரதிய ஜனதா கட்சி பிரச்சார பிரிவு சேலம் பெருங்கோட்டம் நடத்தும் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் சேலத்தில் சிறப்பாக நடைபெற்றது.