June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி சார்பில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கலைமாமணி முனைவர் வி.முத்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்

வந்தவாசி , ஜன10:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு மற்றும் தலைக் கவசம் அணிதல் விழிப்புணர்வு பேரணியை கல்லூரி தலைவர் கலைமாமணி முனைவர் வி‌.முத்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். தெள்ளார் காவல் நிலையத்தில் இருந்து அம்பேத்கர் சிலை வரை நடைபெற்ற இப்பேரணிக்கு கல்லூரி இயக்குனர்கள் எஸ்.அப்பாண்டைராஜன், அருள் முருகன், பொருளாளர் எஸ்.பழனிச்சாமி, சுவாமி விவேகானந்தா ஐடிஐ முதல்வர் பி.ஏழுமலை, சாலை பாதுகாப்பு திட்டம் ஒருங்கிணைப்பாளர் மு.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் இரா.ஏழுமலை வரவேற்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தெள்ளார் சப் இன்ஸ்பெக்டர்கள் பாபு, தமிழ்ச்செல்வி ஆகியோர் கருத்துரை வழங்கினர். இந்த பேரணியில் 200 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் சாலைப் பாதுகாப்பு முறைமைகள் பற்றிய விழிப்புணர்வு தகவல்களை கல்லூரி தலைவர் கலைமாமணி முனைவர் வி‌.முத்து மாணவர்களுக்கு வழங்கினார். மேலும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. கல்லூரி இயக்குநர் டிகேஜி ஆனந்தன் நிகழ்வை தொகுத்து வழங்கினார். இறுதியில் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினார்.