June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரசுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமைப்பு – தமிழக முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !

காயல் பட்டிணம் -07

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டிணத்தில் சொந்த வீடு நிலம் இல்லாமல் வாடகை விட்டில் பல குடும்பங்கள் வசித்து வரும் இந்த நிலையில் வாடகை வீட்டின் உரிமையாளர்கள் ஆண்டு தோறும் வீட்டின் வாடகை பணம் ஏற்றி கூடுதலாக வசூலித்து வருகின்றனர் . இதனால் வாடகை வீட்டில் வசித்து வரும் ஏழை மக்கள் மாதம் தோறும் வீட்டு வாடகை பணம் கொடுக்க முடியாமல் பல குடும்பங்கள் மிகவும் சிரமம் பட்டு வசித்து கின்றனர்.

மேலும் அரசுக்கு சொந்தமான புறம் போக்கு நிலங்களை 15 ஆண்டுக்கு முன்பு தனி நபரின் பெயருக்கு பட்டாவை பதிவு செய்து வைத்திருக்கின்றனர்?
மேலும். ஆக்கிரமைப்பு செய்து வைத்திருக்கும் நபரின் மீது சட்டரீதியாக வழக்கு பதிவு செய்து கடுமையான தண்டனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே.காயல் பட்டிணம் சுற்றியுள்ள பகுதிகளில் அரசுக்கு சொந்தமான புறம் போக்கு நிலங்கள்
ஆக்கிரமைப்பு செய்ய பட்ட நிலங்களை முறையாக ஆய்வு செய்து அந்த நிலங்களை தமிழக அரசு கை பற்றி வாடகை வீட்டில் வசித்து வரும் ஏழை மக்களுக்கு தாமதம்யின்றி விரைவாக வழங்க முன்வர வேண்டும். என
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.