வந்தவாசி, ஜூன் 24;
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி தலைவர் மு.ரமணன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் வி.பிரியா ரமணன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் சி.ருக்மணி வரவேற்றார்.
தமிழ் துறை தலைவரும், யோகா பயிற்சியாளருமான மா.ஞானமலர் பங்கேற்று, யோகாவும் மனிதநேய மாண்பும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி, யோகாசன முறைகளை மாணவிகளுக்கு விளக்கினார். மேலும் பல்வேறு யோகாசன முத்திரைகளை மாணவிகள் செய்து காட்டினர். இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். இறுதியில் தமிழ் துறை பேராசிரியை சாந்தி நன்றி கூறினார்.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!